தமிழகத்தில் பாஜக மறைமுக ஆட்சி செய்வதாக விமர்சனங்கள் உள்ள நிலையில், பாஜகவை மறைமுகமாக அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியுள்ளார்.

தமிழர்கள் மீது பிறமொழிகளை திணிக்க பாஜக முயற்சிப்பதாக ராகுல் குற்றம்சாட்டியிருந்தார். தங்களது அழகான மொழியிலிருந்து பிறமொழிகளுக்கு மாறுவதற்கு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். தமிழர்கள் மீது பிறமொழிகளை திணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழை பாஜக நசுக்கப் பார்க்கிறது என ராகுல் பேசியிருந்தார்.

ராகுலின் கருத்து தொடர்பாக ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும் என பதிலளித்தார்.

தமிழை பாஜக நசுக்கப் பார்ப்பதாக ராகுல் கூறியது தொடர்பான கேள்விக்கு, எந்த கொம்பனாலும் தமிழை அழிக்க முடியாது என மறைமுகமாக பாஜகவை தாக்கும் வண்ணம் பேசியுள்ளார்.

அண்மையில், பாஜகவின் எண்ணத்திற்கு ஏற்றபடியெல்லாம் ஆட முடியாது என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.