எம்.எல்.ஏக்கள் துரோகம் செய்தால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும், டிடிவி தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்களும் முதலமைச்சரை தொடர்பு கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 109 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. 

இதிலிருந்து முதலமைச்சருக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநருக்கு புரிந்திருக்கும் எனவும் எனவே விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும் டிடிவி தரப்பு கூறி வருகின்றனர். 

இந்நிலையில், எம்.எல்.ஏக்கள் துரோகம் செய்தால் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும், டிடிவி தரப்பில் உள்ள எம்.எல்.ஏக்களும் முதலமைச்சரை தொடர்பு கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

மேலும், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது எனவும், கூட்டணி எம்.எல்.ஏக்கள் ஆதரவு எங்களுக்கே எனவும் தெரிவித்தார். 

டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் 9 பேர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார்.