சாத்தான்குளம் சென்று ஜெயக்குமார் – பென்னிக்ஸ் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த விவகாரம் தான் தற்போது மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ளது. சென்னையில் இருந்துதூத்துக்குடிக்கு இ பாஸ் இல்லாமல் உதயநிதி சென்றது எப்படி என்று சீமான் கேள்வி எழுப்பினார். அதற்கு இ பாஸ் இல்லாமல் சட்டவிரோதமாக விதிகளை மீறி உதயநிதி சென்று வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். ஆனால் இ பாஸ் பெற்று முறையாகவே சென்று வந்ததாக உதயநிதி பதில் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள் மற்றும் இ பாஸ் விநியோகம் செய்யும் அதிகாரிகளிடம் முறையாக தான் கேட்டுவிட்டதாகவும் உதயநிதி என்கிற பெயரில் எந்த இபாசும் யாருக்கும் விநியோகம் செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இ பாஸ் இல்லாமல் அதிகாரிகளை ஏமாற்றி ஒரு 420 வேலை செய்து உதயநிதி சாத்தான்குளம் சென்று வந்துள்ளது தெரியவந்திருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது போன்ற வேலைகளில் ஈடுபடுவது திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்திற்கு கை வந்த கலை என்றும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.

மேலும் உதயநிதி இ பாஸ் முறையாக பெறவில்லை என்பதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளதாகவும் அவர் மீது என்ன நடவடிக்கை என்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். தான் முறையாக சென்று வந்ததாக கூறி வரும் உதயநிதி அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார். இ பாஸ் பெற்றது உண்மை என்றால் அதனை உதயநிதி வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இ பாஸ் வெளியிட உதயநிதி தயாராக இல்லை என்பதன் மூலமே அவரிடம் இ பாஸ் இல்லை என்பது தெரியவந்திருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இ பாஸ் இல்லாமல் இருந்ததாக கூறி சென்று வந்திருப்பது 420 வேலை இல்லையா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் இவ்வளவு கூறிய பிறகும் உதயநிதி தரப்பில் இருந்து  இ பாஸ் பெற்றிருந்தால் அதனை வெளியிடாமல் இருப்பது அமைச்சரின குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என்று ஆக்கிவிடும். அல்லது உண்மையில் எப்படி சென்று வந்தோம் என்றாவது திமுக தரப்பில் இருந்து விளக்கம்அளிக்கலாம்.