Asianet News TamilAsianet News Tamil

வரும், ஆனா வராது; மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் விமர்சனம்

நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மகளிருக்கான 33% இடஒதுக்கீட்டு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், அது நடைமுறைக்கு வருமா என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Minister geetha jeevan question about women reservation bill in thoothukudi district vel
Author
First Published Sep 23, 2023, 8:17 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்தும், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய தலைவி கஸ்தூரி சுப்புராஜ் மற்றும் ‌ நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மகளிர் உரிமைத் தொகைக்காக மேல்முறையீடு செய்ய வரும் பெண்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் கனிவுடன் நடந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் பெண்களை அவதூறாக பேசிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. 

சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த மனைவி மண்வெட்டியால் அடித்து கொலை; ராமநாதபுரத்தில் பரபரப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரும் ஆனா வராது என்று தான் சொல்வேன். ஏனென்றால் எந்த ஒரு அடிப்படை செயலையும் செய்யாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை, வரைமுறைப்படுத்தப் போகிறோம் என்கிறார்கள். அதனால் வராது. இது கண்துடைப்புக்காக பாஜக தேர்தலை நோக்கி இதை தாக்கல் செய்துள்ளனர். வந்தால் மகிழ்ச்சிகரமான விஷயம் தான். ஆனால் இதை உடனடியாக பெண்கள் நலனுக்காக செய்யலாம் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios