மேடையில் பேசுவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேறு வழியின்றி பாதிவழியிலேயே வெளியேறிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அனைவரும் பேசிய நிலையில் அடுத்ததாக விஜயபாஸ்கர் அழைக்கப்பட்டார்.

அதுவரை அமைதியாக இருந்த பொதுமக்கள், விஜயபாஸ்கர்  மேடைக்கு வந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். சற்று நேரம் அமைதி காத்தும் பொதுமக்களின் ஆவேசம் அடங்காததால் வேறு வழியின்றி விஜயபாஸ்கர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருப்பதை கேள்விபட்டிருப்போம்.. ஆனால் முதல் முறையாக தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில், அமைச்சருக்கு எதிராக மக்களே அமளியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.