Minister Dindigul Srinivasans speech is controversial

உன்னயெல்லாம் யாரும் போட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால், நீயே மாட்டிக்குவ என சினிமாவில் காட்சிகளில் நாம் பார்த்திருப்போம். அப்படித்தான் தற்போது அதிமுக அமைச்சர்கள் அவர்களாகவே தாங்கள் தலைவர்கள் செய்த தவறை தாங்களே பொதுகூட்ட மேடைகளை போட்டு உடைகின்றார்கள்.

அதிமுக அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தற்போது ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் திருடிவிட்டதாக பேசி அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார். இவரின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திண்டுக்கல் சீனிவாசன் “அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் வியப்புடன் அமைச்சரை பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் வேறு தலைப்பில் பேச்சைத் தொடங்கினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

கடந்த காலங்களில் பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆனால் தற்போது ஜெயலலிதாவே கொள்ளையடித்தார் என ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த ஒருவரே இப்படி வெளியிட்ட சர்ச்சை கருத்துகளுக்கு எல்லாம் உச்சமாக அமைத்திருக்கிறது.