Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவின் இரு அணிகளை இணைக்க குழு…? – விளக்குகிறார் அமைச்சர் சீனிவாசன்…

Minister Dindigul Srinivasan said that the information released on the basis of the talks was set up to link two teams of the High Command.
Minister Dindigul Srinivasan said that the information released on the basis of the talks was set up to link two teams of the High Command.
Author
First Published Jul 6, 2017, 8:11 PM IST


அதிமுகவின் இரு அணிகளும் இணைக்க பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணியாக பிரிந்ததை தொடர்ந்து தற்போது ஒபிஎஸ், இபிஎஸ், டிடிவி என மூன்று அணியாக செயல்பட்டு வருகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்கு முன்னதாக எடப்பாடி அணி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்தது. இதையடுத்து பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் இணைப்பு பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்த்து.

ஆனால் சில நாட்களில் வெளியே வந்த தினகரன் கட்சி பணியில் தொடருவேன் என்றார். இதனால் எடப்பாடி அணி நாடகமாடுவதாக கூறி பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை குழுவை கலைத்தார்.

இதைதொடர்ந்து, பேச்சுவார்த்தை கடைசி நிலையில் உள்ளதாகவும் கண்டிப்பாக இணையும் எனவும் எடப்பாடி தரப்பு அறிவித்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரு அணிகளும் இணைக்க பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் எனவும், காலப்போக்கில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பொதுச்செயலாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட உள்ளதாக வெளிவரும் தகவல்கள் கற்பனையே என கூறினார்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios