Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸை மன்னிக்க முடியாது... முரண்டு பிடிக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம்..!

முதல்வர் பழனிச்சாமிக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் அளிக்கும் விருந்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

minister cv shanmugam may avoid ramadoss feast
Author
Tamil Nadu, First Published Feb 22, 2019, 10:18 AM IST

முதல்வர் பழனிச்சாமிக்கு பாமக நிறுவனம் ராமதாஸ் அளிக்கும் விருந்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அந்த மாவட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமதாஸ், அப்போது மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனால் ராமதாசுக்கும், சி.வி. சண்முகத்துக்கும் இடையே கடும் மோதல் இருந்து வருகிறது. minister cv shanmugam may avoid ramadoss feast

மேலும் பாமக மீது தீரா பகையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. அவர் தலைமை தாங்கும் கூட்டங்களில் ராமதாசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த சூழலில் தான் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. அதுவும் பிற கட்சிகளை விட அதிகபட்சமாக 7 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டை பாமகவிற்கு ஒதுக்கீடு செய்து அதிமுக அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. minister cv shanmugam may avoid ramadoss feast

ஏற்கனவே பாமக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக தலைமையின் நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமதாஸ் அளிக்கும் விருந்தில் சண்முகமும் பங்கேற்பாரா என்ற சந்தேகம் அதிமுகவினருக்கு எழுந்துள்ளது. ஆனால், இவர்களுடன் மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் பங்கேற்க மாட்டார் என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். minister cv shanmugam may avoid ramadoss feast

இதனால் எதிரும் புதிருமாக உள்ள அமைச்சர் சி.வி. சண்முகத்தையும் ராமதாசையும் முதல்வர் சமாதானம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த சமரசத்தை சி.வி சண்முகம் ஏற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios