எம்.பி.,க்கள் மற்றும்  எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு ஒன்றில் தமிழக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதாவது கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் தமிழக விளையாட்டு துறை அமைச்சராக உள்ள பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் சூழ்நிலை உருவானது.   இந்த சிறை தண்டனைக்கு பின்பும் 6 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாதுஅதே நேரத்தில்  இந்த தீர்ப்பினை எதிர்த்து  அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமியை பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்..  இந்த சந்திப்பில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பாவகிருஷ்ணா ரெட்டி  எடப்பாடி சந்திப்பை அடுத்து  முதலமைச்சர் , சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

இந்த ராஜினாமா கடிதம் உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது ராஜினா ஏற்கப்படும் என்றும், ஒரு சில நேரங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும்  தகவல்கள்  வெளியாகியுள்ளன