சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மத்திய  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய நிதி  அமைச்சர் அருண் ஜெட்லி சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல நாட்களாக சிகிச்சை எடுத்து வந்தார். டெல்லி  எய்ம்ஸ் மருத்துவர்கள் அருண் ஜெட்லிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அருண் க்ஷ4ட்லி உடல்நலக்குறைவு காரணமாக பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கவில்லை .

இந்நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்போவதாக பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், அருண் ஜெட்லி  இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை அவருக்கு அறுவை சிகிச்சை  நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,