Asianet News TamilAsianet News Tamil

மாட்டுச்சாணம் மட்டும் இல்லங்க... கோமியமும் நல்லதுதான்..! செல்லூர் ராஜூவுக்கு போட்டியாக களமிறங்கிய அமைச்சர் அன்பழகன்..!

minister anbazhagan advice
minister anbazhagan advice
Author
First Published Oct 13, 2017, 3:02 PM IST


மாட்டுச் சாணத்தில் மட்டுமல்லாது மாட்டு கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச அறிவியல் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பழகன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, வெளிநாடுகளை ஒப்பிடுகையில், இந்திய மாணவர்களுக்கு அறிவியல் மீதான நாட்டம் குறைவாகவே இருப்பதாகவே தெரிவித்தார்.

நம் அன்றாட வாழ்வில் நடைமுறையில் இருந்த பல்வேறு அறிவியல் அம்சங்களை மறந்துவருவதாகவும் அவற்றைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் மாட்டுச்சாணத்தில் மட்டுமல்லாது கோமியத்திலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரிவித்தார். 

அண்மையில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மாட்டுச்சாணத்தை வீட்டு வாசலில் தெளிப்பதன்மூலம் கிருமிகள் அழியும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios