Asianet News TamilAsianet News Tamil

சென்னைய திமுக கோட்டைன்னு சொன்னாங்க, இப்போ என்ன ஆனது? தில்லாக சவால் விடும் ஜெயக்குமார்...

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெறும் என  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

MInIstar jayakumar exclusive pressmeet
Author
Chennai, First Published Jan 1, 2019, 7:40 PM IST

நேற்று திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து, அரசியல் காட்சிகள் , தேர்தல் பணிக்குழு அமைத்தல்,  படு பிசியாக இருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில்  வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்; தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது; சிலருக்கு பாகற்காய் போன்றது . ஒரு காலத்தில் சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தது.. இன்று நிலை என்ன?. சென்னையை போல் திருவாரூரிலும் வெற்றி பெறுவோம்.

சினிமாவுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது தமிழக அரசுதான். தமிழக அரசு எடுத்த முயற்சியால் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இன்று குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்தை உதாசீனப்படுத்த முடியாது. அதில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அரசு தேவை என கருதினால் சிலரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடும் என்று கூறினார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios