Asianet News TamilAsianet News Tamil

​கோடி கோடியாய் வங்கியில் டிரான்ஸ்ஃபராகும் பணம்... உங்கள் அக்கவுண்டுக்கும் வரலாம்..!

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Millions of crores of money being transferred to the bank ... may come to your account ..!
Author
Tamil Nadu, First Published Sep 25, 2021, 11:35 AM IST

மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

பீகார் மாநிலம், பாட்னா கிராம வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ரஞ்சித் தாஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு தவறுதலாக ரூ. 5.5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்யப்பட்டது. அந்த பணத்தை ரஞ்சித் தாஸிடம் சென்று வங்கி சார்பில் நடந்த விவரத்தைக் கூறி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர்.  இதைக் கேட்டு அதிர்ச்சியான ரஞ்சித் தாஸ், ‘’பணம் தனது வங்கிக் கணக்குக்கு வந்தவுடன் பிரதமர் மோடி வாக்குறுதியளித்த 15 லட்ச ரூபாயில் முதல் தவணைதான் தனக்குக் கிடைத்துள்ளதாக நினைத்து அதனை முழுமையாக செலவழித்துவிட்டேன். அதனை தன்னால் திருப்பித் தர இயலாது. என்னிடம் பணம் எதுவும் இல்லை’’ எனக் கூறியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள், ரஞ்சித் தாஸ் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். Millions of crores of money being transferred to the bank ... may come to your account ..!

பீகார் மாநிலம், கட்ஹார் மாவட்டம், பாஸ்டியா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார். அவர்கள் இருவரும் உத்தர் பீகார் கிராமின் வங்கியில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அஷிஷ்ட் குமார் ஆகிய இருவரும் தங்களது பள்ளிச் சீருடைக்காக அரசு எவ்வளவு ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது என்று சோதனை செய்வதற்காக அருகிலுள்ள எஸ்.பி.ஐ வங்கிக்கு சென்றுள்ளனர்.

வங்கியில் சோதனை செய்தபோது விஸ்வாஸ் வங்கிக் கணக்கில் 60 கோடிரூபாய் பணமும், அஷிஷ்ட் குமார் வங்கிக் கணக்கில் 900 கோடி ரூபாய் பணமும் இருந்துள்ளது. இந்த விவகாரம் தெரியவந்த நிலையில் வங்கி மேலாளர் மனோஜ் குப்தாவும் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க முடியாதபடி முடக்கியுள்ளனர். தவறுதலாக செலுத்தப்பட்ட பணம் எங்கிருந்தது வந்தது என்று உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.Millions of crores of money being transferred to the bank ... may come to your account ..!

​இந்நிலையில், இந்நிலையில், பீகார் மாநிலம் கிசானி கிராமத்தை சேர்ந்த விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க விரும்பியுள்ளார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பதாக தெரியவந்தது.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சேர வந்த கூலி தொழிலாளி பெயரில் வங்கி கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்தார். முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்க விரும்பிய தனக்கே தெரியாமல் தன்னுடைய பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு சவுகானும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதனை தெரிவித்துள்ளார் சவுகான். அவரது பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது.

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சவுகான் புகார் அளித்ததும் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

Millions of crores of money being transferred to the bank ... may come to your account ..!

இப்படி வங்கிக்கணக்கில் பணம் வருவது எப்படி? வங்கிகளுக்கு தெரியாமல் இப்படி நடக்க முடியாது. கருப்புப்பணத்தை வெள்ளையாக்க, மாணவர்கள், ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கும் வங்கிக்கணக்கில் பணத்தை பரிமாற்றம் செய்ய வைத்து அதனை வெள்ளையாக்கும் செயல்பாடுகள் பல காலமாக நடைபெற்று வருகிறது. இப்போதும் அது தான் நடந்துள்ளது. வங்கி மேலாளர்களுக்கு தெரியாமல் இது நடைபெற சாத்தியமில்லை. விபரமறிந்தவர்கள் அக்கவுண்டில் போட்டால் தெரிந்து விடும் என்பதால் அதனை தவிர்த்து ஏழை எளிய மக்கள் கணக்கில் சேர்த்து மடைமாற்றம் செய்கின்றனர். இதில் பெரும் தலைகள், அரசியல்வாதிகள் திடர்பிருப்பதால், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தும் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆர்.பி.ஐ, இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios