திருவள்ளூரில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 7 அமைச்சர்கள் பங்கேற்காததால், தமிழக அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பஞ்செட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை 7 அமைச்சர்கள் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன், எம்.ஆர். விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், பாலகிருஷ்ணரெட்டி, கே.சி. கருப்பண்ணன், துரைக்கண்ணன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவில்லை. 

தற்போது தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், அமைச்சர்கள் கலந்து கொள்ளாதது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.