Asianet News TamilAsianet News Tamil

'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் கேரளா முதல்வர் வேட்பாளர் இல்லை... பல்டியடித்த பாஜக..!

கேரள மாநில முதல்வர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்  'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன். ஆனால் அதனை தாம் அறிவிக்கவில்லை என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Metro Man Sreedharan is not the Chief Ministerial candidate of Kerala ... BJP defeated
Author
Tamil Nadu, First Published Mar 6, 2021, 11:06 AM IST

கேரள மாநில முதல்வர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்  'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன். ஆனால் அதனை தாம் அறிவிக்கவில்லை என கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கொச்சி, டெல்லி ஆகிய நகரங்களின் மெட்ரோ தலைவராக இருந்தவர் ’மெட்ரோ மேன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். 88 வயதான அவர், தாம் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட போவதாக தெரிவித்து, தேர்தலில் நிற்க போவதாகவும் ஸ்ரீதரன் அறிவித்தார். கேரளாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதல்வர் பொறுப்பை தாம் ஏற்க தயார் என்றும் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

Metro Man Sreedharan is not the Chief Ministerial candidate of Kerala ... BJP defeated

இதையடுத்து,  கேரளாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி சார்பில் தகவல் வெளியானது.
இந்நிலையில், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திடீரென இதை மறுத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஸ்ரீதரனை முதல்வராகப் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள் என்றுதான் தெரிவித்தேன். ஆனால், பாஜக முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன் என்று நான் அறிவிக்கவில்லை.Metro Man Sreedharan is not the Chief Ministerial candidate of Kerala ... BJP defeated

முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சியின் விருப்பம், மக்களின் விருப்பத்தைத்தான் நான் நேற்று தெரிவித்தேன். நான் அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் குறிப்பிட்டதைத்தான் வைத்துத்தான், ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் என்று மத்திய அமைச்சர் முரளிதரன் ட்விட் செய்திருந்தார். அதன் அடிப்படையில்தான் நான் தெரிவித்தேன்" எனத் தெரிவித்தார். "பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை"என்று மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios