Asianet News TamilAsianet News Tamil

அடுத்து பாஜகவில் இணையப் போகும் பிரபலம்... சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவும் தயார் என அறிவிப்பு...!

கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வரும் இவர் விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

metro man sreedharan going to join Kerala BJP Soon
Author
Kerala, First Published Feb 18, 2021, 6:59 PM IST

இந்தியாவின் மெட்ரோ மனிதர் என அழைக்கப்படுவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீதரன். இந்திய ரயில்வே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஸ்ரீதரன், தற்போது கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திரிதலா எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் இந்தியாவின் முதல் மெட்ரோ என்ற பெருமை கொண்ட கொல்கத்தா மெட்ரோ ரயிலை உருவாக்கியவர். லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர், விசாகபட்டிணம், விஜயவாடா, கோவை மெட்ரோ நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், செவாலியே உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான ஸ்ரீதரன் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வெளியிட்டுள்ள அதிரடி முடிவு, பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

metro man sreedharan going to join Kerala BJP Soon

கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் வசித்து வரும் இவர் விரைவில் பாஜகவில் சேர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் ‘வரும் பிப்ரவரி 21ம் தேதி கேரள பாஜக சார்பில் நடைபெறவிருக்கும் ‘விஜய யாத்திரை’-யின் போது ஸ்ரீதரன் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைய இருப்பதாக’தெரிவித்துள்ளார். 

metro man sreedharan going to join Kerala BJP Soon

கேரளாவில் இதுவரை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணி சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை என்றும், கடந்த 20 ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு தொழிற்சாலை கூட அமையவில்லை என்றும் ஸ்ரீதரன் குற்றச்சாட்டியுள்ளார். அதேபோல் பாஜக வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளதால் அக்கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கட்சி விரும்பினால் எதிர்வர உள்ள சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட தயாராக உள்ளதாக 

Follow Us:
Download App:
  • android
  • ios