மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைக்க ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க முடியுமா என்று அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிச. 5 அன்று உடல்நலகுறைவால் மரணமடைந்தார்.
தமிழக அரசியலில் எம்ஜிஆருக்கு அடுத்து அதிமுகவை தலைமையேற்று நடத்தி பலமுறை ஆட்சியிலும் அமர்த்தி வெற்றி நடை போட செய்தவர் ஜெயலலிதா.

அவர் மறைந்த பின்னர் அவரது உடல் அரசு மரியாதையுடன் பீரங்கிகள் முழங்க சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யபட்டது.
இதன் பின்னர் ஜெவின் சமாதியை ரூ.5.5 கோடி செலவில் நினைவிடமாக அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு வருட தண்டனையை உறுதிபடுத்தினர்.
ஜெ. மறைந்து விட்டதால் அவர் மீது தண்டனை ரத்து செய்யப்பட்டது ஆனாலும் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அபராதம் வசூலிக்கபடும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜெ. நினைவிடத்தை அமைக்க ரூ.5.5 கோடி நிதி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கபட்டுள்ளது.
ஜெயலலிதாவை சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவித்துள்ளதால் அரசு செலவில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது.
இதனால் இந்த விவகாரத்தில் என முடிவு எடுப்பது என்பது தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
