ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவரின் பெயரை வைப்பது அறுவறுப்பு என்றல் அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா? இல்லை ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? என உதயநிதி ஸ்டாலினை கலங்கடிக்கும் மீம்ஸ்கள் இணையதளத்தை கலங்கடித்து வருகிறது.

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், '’முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் @mkstalin அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம். மெட்ரோ ஆகாதென மோனோ கேட்டவர் பெயரை, கழக அரசால் வந்த மெட்ரோவுக்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார். உதயநிதியில் இந்த மட்டமான கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்த மீம்ஸ்களும் இணையத்தை கலங்கடித்து வருகிறது. அதில், ‘’ராஜாத்தி என்ன இந்திய சுதந்திர போராட்ட தியாகியா? ராஜாத்தி பெயரில் எதுக்கு தெருப் பெயர். தமிழகத்தில் எந்த அரச பதவியை அலங்கரித்தார் என்று அவருக்கு இந்த அங்கீகாரம்?  ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர் பெயரை வைப்பது அறுவறுப்பு என்றால், அஞ்சுகம் அம்மாள் என்ன அமெரிக்கா ஜனாதிபதியா? இல்லை ராசாத்தி என்ன இராஜ குடும்பமா? திமுகவின் முதல் அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் அமைச்சர் சத்திய வாணி முத்துவின் பெயரை எத்தனை திட்டத்திற்கு சூட்டியிருக்கிறார் கருணாநிதி? சொல்லுங்கள் உதய்.

ரயிலில் வித்அவுட்டில் வந்தவருக்கு மெரினாவில் சமாதியா என நாமும் பதிலுக்கு கேட்கலாம் தானே ?அசிங்கத்தின் மொத்தம் கருணாநிதி. அசிங்கத்தின் மிச்சம் ஸ்டாலின். அசிங்கத்தின் சொச்சம் உதயநிதி. அம்மாவின் பெயரை வைத்த காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்த தம்பி உதயநிதி  2015 ஆண்டுகளில் மெட்ரோ முதல் வழித்தடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது அம்மா தான்.! இந்த வரலாறெல்லாம் அப்போது நண்பேன்டா படத்தில் சந்தானத்துக்கு சைடு ரோலாய் நடித்து கொண்டிருந்த உதயநிதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என மீம்ஸ்களை போட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.