Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு போய்டாதீங்க தங்கம்..! உருகும் எடப்பாடி..! பொருமும் ஓபிஎஸ்..!

திமுகவுடன் தங்கதமிழ்செல்வன் பேசுவதாக கிடைத்த தகவலால் எடப்பாடி பழனிசாமி சுறுசுறுப்பாகி அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.

Melting edappadi palanisamy...
Author
Tamil Nadu, First Published Jun 26, 2019, 10:36 AM IST

திமுகவுடன் தங்கதமிழ்செல்வன் பேசுவதாக கிடைத்த தகவலால் எடப்பாடி பழனிசாமி சுறுசுறுப்பாகி அவரை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.

தங்கதமிழ்செல்வன் – தினகரன் மோதல் கடந்த ஒரு மாத காலமாகவே இருந்து வந்த நிலையில் தான் கட்சி மாறும் முடிவுக்கு தங்கதமிழ்செல்வன் வந்திருந்தார். அதிலும் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று தங்கதமிழ்செல்வன் கூறியது அமமுகவில் புயலை உருவாக்கியது. இதன் பின்னர் தான் தங்கதமிழ்செல்வனை நேரில் அழைத்து தினகரன் கண்டித்துள்ளார். Melting edappadi palanisamy...

இந்த நிலையில் திரைமறைவில் அதிமுகவில் இணைய தங்கதமிழ்செல்வனுடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி மூலமாக பேச்சுவார்த்தை நடைபெறத் தொடங்கியது. இதனை அறிந்த திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி இங்கு வந்துவிடுங்கள் மீண்டும் எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதே போல் அமமுகவில் தினகரனுக்கு நெருக்கமாக இருந்த கலைராஜனும் தங்கதமிழ்செல்வனை திமுகவிற்கு அழைத்து வர தீவிரம் காட்டினார். Melting edappadi palanisamy...

அதிமுக தரப்பில் இருந்து உறுதிமொழி எதுவும் வராத நிலையில் திமுக பக்கம் சாய தங்கதமிழ்செல்வன் முடிவெடுக்க இதனை அறிந்து எடப்பாடி உடனடியாக தங்கதமிழ்செல்வனுடன் பேசி டீலை முடிக்குமாறு வேலுமணியிடம் கூறியதாக சொல்கிறார்கள். இது குறித்து வேலுமணி பேசிய போது ராஜ்யசபா எம்பி பதவியை தங்கதமிழ்செல்வன் கேட்டுள்ளார். ஆனால் ராஜ்யசபா எம்பி பதவிக்கு வாய்ப்பில்லை அடுத்த தேர்தலில் எம்எல்ஏ சீட் உறுதி என்று அதிமுக தரப்பில் கூறியுள்ளனர். Melting edappadi palanisamy...

ஆனால் அதிமுக டிக்கெட்டில் நின்றால் அடுத்த முறை எம்எல்ஏ ஆக முடியாது என்று தங்கம் கருதுகிறார். இதனால் திமுகவில் ஐக்கியமாக தங்கதமிழ்செல்வன் பேசி வருகிறார். தேனி மாவட்டச் செயலாளர் பதவியும் எம்எல்ஏ சீட்டும் உறுதி அளிக்கப்பட்டால் திமுகவில் ஐக்கியமாகிவிடலாம் என்பது தான் தங்க தமிழ்செல்வனின் தற்போதை நிலை. Melting edappadi palanisamy...

ஆனால், இதனை உடைத்து அவரை எப்படியும் அதிமுகவில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எடப்பாடி தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் ஓபிஎஸ் தரப்பு கடும் எரிச்சல் அடைந்துள்ளது. தங்கதமிழ்செல்வனை வைத்து தேனியில் தங்களுக்கு எதிராக அரசியல் செய்ய எடப்பாடி நினைக்கிறாரா என்று அவர்கள் கண் சிவந்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios