Meira Kumar is Jagjivan Rams daughter Has she forgotten how her own brother and father were treated
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி ேதர்தலில்வேட்பாளராக நாட்டின் முதல் பெண் சபாநாயகர் எனப் பெருமை பெற்ற மீரா குமார்(வயது72) நிறுத்தப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம், அரா மாவட்டத்தில் கடந்த 1945ம் ஆண்டு, மார்ச் 31-ந்தேதி மீரா குமார் பிறந்தார். இவரின் தந்தை, தலித் சமூகத்தின் மிகப்பெரியத் தலைவரும், சுதந்திரப்போராட்ட வீரரும், முன்னாள் துணை பிரதமருமான ஜெகஜீவன் ராம். தாய் இந்திராணி தேவி.
மீரா குமார் தனது பள்ளிக்கல்வியை டேரூடான் வெல்காம் பள்ளியிலும், ஜெய்பூர்மாகராணி காயத்ரி தேவி பெண்கள் பள்ளியிலும் முடித்தார். டெல்லி பல்கலையில் எம்.ஏ. பட்ட மேற்படிப்பும், இந்திரபிரஸ்தா கல்லூரியில் எல்.எல்.பி. சட்டமும்மீராகுமார் பயின்றார்.
இந்திய ஆட்சிப்பணித் தேர்வு எழுதி, கடந்த 1970ம் ஆண்டு இந்திய வௌியுறவுபணியில் மீராகுமார் சேர்ந்தார். ஏறக்குறைய 15 ஆண்டுகள் பல்வேறு நாடுகளில்மீராகுமார் பணியாற்றினார்.
1985ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது அரசியல பயணத்தை மீரா குமார் தொடங்கினார். உத்தரப்பிரதேசம் பிஜ்னோர் தொகுதியில் மீரா குமார் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், தலித் சமூகத்தின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களான மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரையும் ேதர்தலில்தோற்கடித்து வெற்றியாளராக மீரா குமார் வலம் வந்தார்.
2004ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக மீரா குமார் இருந்தார். அதன்பின் 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் மக்களவை சபாநாயகராக மீரா குமார் பணியாற்றினார். இந்திய வரலாற்றில், தலித் சமூகத்தில் இருந்து வந்த முதல் பெண் சபாநாயகர் எனும் பெருமையை மீரா குமார் பெற்றார்.
இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவரின் கணவர் பெயர் மன்ஜுல் குமார் ஆவார்.
