Asianet News TamilAsianet News Tamil

இது அம்பானி பைல்… கையெழுத்து போடுங்க… 150 கோடி ரூபாய் தரேன்னு சொன்னாங்க… ஆளுநர் ஷாக் தகவல்

அம்பானி பைலுக்கு ஒப்புதல் தந்து கையெழுத்து போட்டால் 150 கோடி ரூபாய் பணம் தருவதாக தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மேகலாயா ஆளுநர் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

Meghalaya governor Ambani file
Author
Delhi, First Published Oct 23, 2021, 8:25 AM IST

அம்பானி பைலுக்கு ஒப்புதல் தந்து கையெழுத்து போட்டால் 150 கோடி ரூபாய் பணம் தருவதாக தம்மிடம் பேரம் பேசப்பட்டதாக மேகலாயா ஆளுநர் பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

Meghalaya governor Ambani file

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்ய பால் மாலிக். இப்போது மேகாலயாவின் ஆளுநராக இருக்கிறார். இவர் வெளியிட்டு உள்ள முக்கிய தகவல் தேசிய அளவில் பெரும் விவகாரமாக உருவெடுத்து உள்ளது.

தாம் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த போது நடந்த விஷயத்தை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு ஆளுநராக போன போது என்னிடம் 2 பைல்கள் வந்தன. ஒன்று அம்பானி தரப்பு பைல், மற்றொரு பிடிபி பாஜக கூட்டணி அரசின் அமைச்சராக இருந்த ஆர்எஸ்எஸ் தொடர்பு கொண்ட நபருடையது.

Meghalaya governor Ambani file

இந்த 2 பைல் தொடர்பான விவகாரங்களிலும் முறைகேடு இருப்பதாக எனது செயலாளர்கள் என்னிடம் கூறினர் அதனை அடிப்படையாக கொண்டு 2 ஒப்பந்தங்களையும் கேன்சல் செய்தேன். ஆனால் கையெழுத்து போட்டால் எனக்கு 150 கோடி பணம் தருவதாக செயலாளர்கள் கூறினர்.

அந்த பணத்தை மறுத்துவிட்டேன். 5 குர்தா பைஜாமாவுடன் வந்தவன், அதுபோதும், அதோடு கிளம்புவேன் என அவர்களிடம் கூறினேன். 2 கோப்புகள் பற்றியும் பிரதமர் பேரை பயன்படுத்தியதால் இந்த விஷயத்தை அவரிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி அதிர்ச்சி கிளப்பி இருக்கிறார்.

Meghalaya governor Ambani file

ஆளுநர் ஒருவரே ஊழல் விவகாரம் பற்றி வெளிப்படையாக பேசி, நடந்தவைகளை கூறியிருப்பது ஆளும் மத்திய பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios