Asianet News TamilAsianet News Tamil

சின்னம்மாவ சந்தித்து பேசுங்க.. இல்ல அதிமுக அலுவலகத்தை கைப்பற்றுவோம்.. இபிஎஸ்சை ஜர்க் ஆக்கும் தேனி கர்ணன்.

அதிமுகவை வழிநடத்த தகுதி இல்லாதவர்கள் என்பதை பொதுமக்களும் தொண்டர்களும் நிரூபித்து விட்டார்கள், அதாவது தமிழகம் முழுக்க வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூட  நாங்கள் கேட்டவில்லை, குறைந்த பட்சம் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டாமா? 

Meet and talk to Chinnamma .. Let's capture the AIADMK office .. Theni Karnan Warned EPS OPS.
Author
Chennai, First Published Feb 25, 2022, 6:36 PM IST

அதிமுக என்ற கட்சியை காப்பாற்ற வேண்டுமென்றால் ஓபிஎஸ் இபிஎஸ் தவறுகளை ஒப்புக்கொண்டு சசிகலாவிடம் மன்னிப்பு கேட்டு சரண்டராக வேண்டும் என சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன் கூறியுள்ளார். வரலாறு காணாத அளவிற்கு அதிமுக படுதோல்வி சந்தித்துள்ள நிலையிலும், ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான பெருயகுளத்திலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ள நிலையிலும் தோல்வி சகஜமானதுதான் என ஓ.பன்னீர்செல்வம் வாய் கூசாமல் பேசிவருகிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை  சந்தித்தாலும் வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன் சட்டமன்றத்திற்கு நுழைந்துள்ளது அதிமுக. ஆனால் அதற்கு அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியை கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 90 சதவீத இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. 138 நகராட்சிகளில் 124ஐ திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் அதிமுக துடைத்தெறியப்பட்டிருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் அதிமுக தொண்டர்களே ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை விமர்சிக்கும் நிலைமை உருவாகியிருக்கிறது. பலரும் எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளனர் அவளிடமிருந்து கட்சியை பாதுகாக்க சசிகலா தலைமைக்கு வர வேண்டும் என பேசி வருகின்றனர்.

Meet and talk to Chinnamma .. Let's capture the AIADMK office .. Theni Karnan Warned EPS OPS.

இந்நிலையில், நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 64வது பிறந்த தினம் அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது, சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சசிகலா உரையாற்றிய சசிகலா, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழக உரிமைகளை எந்த விதத்திலும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை, நானும் இதுவரை

எனக்காக தனியான ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவர் கொடுத்த சட்ட விதிகளின்படி அப்படியே நடத்தி காட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் நம்பிக்கை வீண்போகாமல் காத்துக் கொள்வது நமது அனைவரின் கடமையாகும். 50 ஆண்டுகள் வரலாற்றில் இந்த இயக்கம் இப்படி தொடர் தோல்வியை கண்டதில்லை. இதை மனதில் எண்ணி பார்த்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நாளில் உறுதி ஏற்போம்." ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு - இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வு" இதை எண்ணிப் பார்த்து நாம் செயல்பட வேண்டும்.

Meet and talk to Chinnamma .. Let's capture the AIADMK office .. Theni Karnan Warned EPS OPS.

விதைத்தவர்கள், வளர்த்தவர்களை மறுத்ததால் தான் இன்று இந்த நிலை இதை அவர்கள் உணரவேண்டும். நாம் எல்லாம் ஒன்றிணைய வேண்டும், நாளை நமதே இவ்வாறு அவர் பேசினார். இந்நிலையில் ச சிகலா அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற குரல் ஓங்கிஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சசிகலா ஆதரவாளர் தேனி கர்ணன், அதாமிக வரலாறு காணாத அளவுக்கு தோல்வியை கண்டுள்ளது, இரண்டை இலை சின்னம் என்பது எம்ஜிஆர் சின்னம், அம்மாவின் சின்னம், அந்த சின்னத்தை இன்று ஓபிஎஸ் இபிஎஸ் சிதைத்து விட்டார்கள். 

அதிமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப் படலாம் ஆனால் கட்சியில் தோல்வி  ஓபிஎஸ்-இபிஎஸ் தான் காரணம், அதிமுக தொடர் தோல்வியால் தொண்டர்கள் மிகுந்த மன வலியின் வேதனையில் இருக்கிறார்கள்.  எனவே தோல்வியை ஒப்புக்கொண்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலா அவர்களின் ஆலோசனை பெற வேண்டும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலாவது அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறது என்று அடையாளம் காண்பிக்க வேண்டும் என்றால், இதைச் செய்ய வேண்டும். அவர்கள் இருவரும் சசிகலா அவர்களை சந்திக்க வேண்டும், இவர்கள் தங்களது ஒருங்கிணைப்பாளர்கள் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை ராஜினாமா செய்துவிட்டு எப்போதும்போல இருந்தால் இவர்களை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

Meet and talk to Chinnamma .. Let's capture the AIADMK office .. Theni Karnan Warned EPS OPS.

அதிமுகவை வழிநடத்த தகுதி இல்லாதவர்கள் என்பதை பொதுமக்களும் தொண்டர்களும் நிரூபித்து விட்டார்கள், அதாவது தமிழகம் முழுக்க வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று கூட  நாங்கள் கேட்டவில்லை, குறைந்த பட்சம் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டாமா? ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் தொகுதியில் எடப்பாடியில் வெற்றிப் பெற்றிருக்க இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இவர்கள் இருவரும் தலைவர்கள் என்று கூறலாம், ஆனால் இருவரும் மாறி மாறி தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். இவர்களது சொந்த தெருவில் கூட இவர்களுக்கு தோல்வி கிடைத்திருக்கிறது. சிலர் தங்களது சொந்த பலத்தால் வெற்றி பெற்றவர்கள் இப்போது திமுகவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி கம்பெனியில் பயணிக்க அவர்கள் விரும்பவில்லை என்பதுதான் அதற்கு காரணம்.

எனவே இவர்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு சசிகலா அவர்களை சந்தித்து பேச வேண்டும், இல்லையென்றால் இதே நிலை நீடித்தால் விரைவில் அதிமுகவுக்குள் புரட்சி வெடிக்கும், இவருக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கும், விரைவில் அதிமுக அலுவலகம் கைப்பற்றப்படும், இது  விரைவில் நடக்கப் போகிறது. இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios