தனக்கு  தனி நாடு கைலாசம் இருக்கிறது. சீமானுக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லை என நித்யானந்தா தெரிவித்துள்ளது சீமானின் தம்பிகளை சினம் கொள்ளச் செய்துள்ளது. 

குடியுரிமை போனால் என்ன எங்க ஆள் நித்யானந்தா தனியாக ஸ்ரீகைலாசா என்கிற நாட்டையே உருவாக்கி இருக்கிறார். அந்த நாட்டுக்கு போய் விடுவொம்ம் என நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். 

அதற்கு ஸ்ரீகைலாசா பிரதமர் அலுவலகம் (?) ட்விட்டர் பக்கத்தில் அளித்த பதிவில், ‘’ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல. தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்’எனத் தெரிவித்து இருந்தது.  இந்தபதிவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் திட்டித் தீர்த்து விட்டனர்.

இதனால் பொங்கி எழுந்த நித்யானந்தா கைலாசா பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ‘மீனாட்சி மீனாட்சி இந்த சீமான் தம்பிக என்ன அசிங்கமா பேசுறாங்களே என்ன செய்ய..? விடுப்பா உனக்கு தனி நாடு கைலாசம் இருக்கு சீமானுக்கு ஓரு கவுன்சிலர் கூட இல்ல. உனக்கு மூளை வளர்ச்சி இருக்கு நீ ஞானி. அவனுக்கு?’என பதிவிடப்பட்டுள்ளது. இதற்கும் நாம் தமிழர் கட்சியினர் நித்யானந்தாவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.