இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த கட்டுரையை வெளியிட்டிருந்தது ஏஸியா நெட் தமிழ். ‘தமிழ்நாட்டில் யார் ஜெயித்தாலும், வைகோவோ அவரது கட்சியோ மட்டும் ஜெயிக்கவே கூடாது. அவரது தவறுகளை தொடந்து மக்கள் மத்தியில் விமர்சிச்சு பேசிட்டே இருங்க.’ என்று தமிழக பி.ஜே.பி.க்கு டெல்லி லாபி கட்டளை இட்டிருப்பதாக எழுதியிருந்தோம். 

இதோ அது நிரூபணமாகி கொண்டே இருக்கிறது. மதுரையில் பிரதமர் நிகழ்வு முடிந்தத பின் பேட்டியளித்த தமிழிசை சவுந்தர்ராஜன் ‘ஏழை மக்களும் சிறப்பான மருத்துவம் பெற உதவும் எய்ம்ஸ் திட்டத்தையே வைகோ எதிர்க்கிறார். அவரை இந்த பகுதி மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.’ என்றார். கறுப்பு கொடி பறக்கவிட்ட வைகோவுக்கு, தமிழிசையின் இந்த தாக்குதல் சுட்டது. 

அடுத்து இப்போது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வாய்ப்பு போல. அவரும் சரமாரியாக வெளுத்திருக்கிறார் வைகோவை இப்படி...”ஒரு கட்சி உருவாச்சுன்னா, தன்னோட மாநிலத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணனும், அதுதான் அந்த கட்சியோட அடிப்படை கொள்கையா இருக்கணும். ஆனா ம.தி.மு.க.வோ உருவான நாள்ள இருந்து இது வரைக்கும் தமிழ்நாட்டோட வளர்ச்சிக்கு எதையுமே பண்ணலை. 

பார்லிமெண்ட்ல அந்த கட்சி உறுப்பினர்கள் இருந்தப்ப எதுவும் பண்ணல நம்ம மாநிலத்துக்கு. தமிழகத்துக்காக குரல் கொடுத்து, நாலு நல்லது பண்ணியிருந்தா மக்கள் ஆதரிப்பாங்க. சட்டசபை, நாடாளுமன்றம் ரெண்டுலேயுமே அந்த கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லாதபோதே தெரியலையா, மக்கள் அந்த கட்சியை விரும்பலைன்னு! ஒண்ணு மட்டும் அந்த கட்சி நல்லாவே பண்ணுது. அது போராட்டம். அரசாங்கம் எந்த நல்ல திட்டம் கொண்டு வந்தாலும் சரி, உடனே போராட்டம் போராட்டம். கறுப்பு கொடி காட்டு, கறுப்பு பலூன் பறக்க விடுறதுன்னு கிளம்பிடுறாங்க. 

போராடுறதுக்குன்னே ஒரு கட்சியை யாராச்சும் நடத்துவாங்களா?ன்னு கேட்டால், தாராளமா வைகோவை கைகாட்டலாம். இதெல்லாம் ரொம்ப்ப துரதிர்ஷ்டமான விஷயம்.” என்று வெளுத்துக் கட்டிவிட்டார். தன்னை குறிவைத்து தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் கார்னர் செய்ய துவங்கியிருக்கும் விஷயத்தை வைகோ ஸ்மெல் செய்துவிட அவரும் பதிலடிக்கு தயாராகி இருக்கிறார். ஆக நமக்கு செம்ம என்டர்டெயின்மெண்ட் இருக்குதுன்னு சொல்லுங்க!