Asianet News TamilAsianet News Tamil

மதிமுக வைகோ கட்டுப்பாட்டில் இல்லை.. 28 ஆண்டுகள் அவரை நம்பி மோசம் போய்விட்டேன்.. கதறிய ஈஸ்வரன்.

வாரிசுகளை அரசியலில் முன்னிலைப்படுத்துவது எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறது, ஆனால் அதை நான் மதிமுகவில் எதிர்பார்க்கவில்லை.இயக்கத்தை வாரிசுகளால் மட்டுமே வழிநடத்த முடியும் என்று முடிவு செய்வது தவறான கருத்து, இயற்கையும், சூழ்நிலையும் யாராவது ஒருவரை தலைவராக கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அதற்கு காலம் பதில் கொடுக்கும். 

MDMK is not Vaiko control .. I have trusted him for 28 years and gone bad .. Eeswaran emotion.
Author
Chennai, First Published Oct 21, 2021, 12:16 PM IST
 • Facebook
 • Twitter
 • Whatsapp

வைகோ மகனால் மட்டும்தான் கட்சியை வழிநடத்த முடியுமா என்றும், அவரது மகன் கட்சியில் பதவிக்கு வருவதை வைகோவால்கூட தடுக்க முடியத நிலை உள்ளது  என்றும், இதனல் மனவேதனையில் கட்சியில் இருந்து வெளியேறுவதாக மதிமுக இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கொதித் தெழுந்துள்ளார்.

வைகோ மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும், அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுகவின் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து வெளியே வந்த தான் தனது கட்சியிலும் தனது வாரிசை கொண்டுவருவதா என்ற விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்று அஞ்சிய வைகோ, ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர், வைகோ தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில், வைகோ மகன் துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். 

MDMK is not Vaiko control .. I have trusted him for 28 years and gone bad .. Eeswaran emotion.

இதையும் படியுங்கள்: தஞ்சாவூர் TO தேவர் குருபூஜை.. தென் மாவட்டங்களில் சசிகலா செய்யப்போகும் தரமான சம்பவம்.. பதற்றத்தில் எடப்பாடி.

இந்நிலையில் மதிமுகவிலும் வாரிசு அரசியல் தலைதூக்கி விட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில், கட்சியில் நடந்த நிகழ்வு என்னை கடுமையாக பாதித்து விட்டது, அனைத்தும் என் கையை மீறிப் போய்விட்டது என பொதுச்செயலாளர் வைகோவே கூறும்போது என்னுடைய வேதனைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் கட்சியை விட்டு வெளியேறி விட்டேன். கட்சிக்குள் இருந்தவரை உண்மையாக செயல்பட்டேன், ஆனால் உள்ளத்தில் கருத்துவேறுபாட்டை வைத்துக்கொண்டு கட்சியில் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்ற காரணத்தால் விலகிக் கொள்கிறேன். 

MDMK is not Vaiko control .. I have trusted him for 28 years and gone bad .. Eeswaran emotion.

இதையும் படியுங்கள்: சசிகலாவும் ஸ்டாலினும் கை கோர்த்துட்டாங்க.. அதிமுகவை வச்சு செய்ய முடிவு பண்ணிட்டாங்க.. கதறிய ஜெயக்குமார்.

கட்சிக்கு எடப்பாடியின் மகன் வந்தால் கூட அவரை வரவேற்று கட்சியில் வேலை செய்ய வாய்ப்பு கொடுப்பதுதான் முறை, அதற்கு யாரும் தடைபோட முடியாது, ஆனால் அந்தத் தலைவரின் மகனாள் மட்டும்தான் கட்சியை வழிநடத்த முடியும் என்று நினைப்பது தவறு. 28 வருடமாக வைகோ கட்சியை நடத்துகிறார். கட்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருந்தும் தனது மகனால் மட்டுமே இந்த கட்சியை வழிநடத்த முடியும் என்று அவர்  சொல்வது வியப்பாக இருக்கிறது. இதற்கு வைகோ மனதாரா ஒப்புக் கொண்டு இருக்க மாட்டார், ஆனால் அந்த சூழலுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்து கொள்கையில் உறுதியாக இருந்த வைகோவே இப்போது என் கையை மீறி கட்சி போய்விட்டது என்று சொல்லுகிறார். இதற்குமேல் யார் என்ன செய்ய முடியும். அவராலே கூட துரை வையாபுரி பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தனக்கு பின்னால் இவர்தான் என்று ஒருவரை அடையாளம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அது காலம் முடிவு செய்யும், ஆனால் மதிமுகவிலும் வாரிசு அரசியல் வந்துவிட்டது. 

MDMK is not Vaiko control .. I have trusted him for 28 years and gone bad .. Eeswaran emotion.

எனவே ஒத்த கருத்துள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ஒரு புதிய அமைப்பை தொடங்க உள்ளேன், மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்த உள்ளேன், தொடர்ந்து மக்களுக்காக போராடுவேன் என்றார்.  வாரிசுகளை அரசியலில் முன்னிலைப்படுத்துவது எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறது, ஆனால் அதை நான் மதிமுகவில் எதிர்பார்க்கவில்லை. இயக்கத்தை வாரிசுகளால் மட்டுமே வழிநடத்த முடியும் என்று முடிவு செய்வது தவறான கருத்து, இயற்கையும், சூழ்நிலையும் யாராவது ஒருவரை தலைவராக கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அதற்கு காலம் பதில் கொடுக்கும். அப்படித்தான் இந்த கட்சி இருக்கும் என்று நான் நினைத்தேன்,

MDMK is not Vaiko control .. I have trusted him for 28 years and gone bad .. Eeswaran emotion.

அதை நம்பி இந்த கட்சியில் இருந்தேன், 28ஆண்டுகளாக ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக பயணித்து வந்து, கடைசியில் அப்படியெல்லாம் இல்லை என போட்டு உடைக்கும் போது, என்னால் தாங்க முடியவில்லை, அப்படி கட்சியில் இருக்க வேண்டுமென்றால் எம்எல்ஏ, எம்.பி பதவி கிடைக்கும் என்பதற்காக வேண்டாமானால் இருக்கலாமே தவிர கருத்து ஒற்றுமையுடன் இருக்க முடியாது என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். 
 

Follow Us:
Download App:
 • android
 • ios