மதிமுக மாவட்டச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ நடைபெறும்‌ தேதி மாற்றம்‌ செய்யப்பட்டுள்ளதாக என்று அதன் பொதுச்செயலர்‌ வைகோ தெரிவித்துள்ளார்‌. 

இதுகுறித்து அவர்‌ விடுத்துள்ள அறிக்கையில்‌, காவிரியின்‌ குறுக்கே மேகேதாட்டுவில்‌ அணை கட்டக்‌ கூடாது என தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. இதுகுறித்து, தமிழக சட்டமன்றக்‌ கட்சிகள்‌ அடங்கிய குழு, தில்லிக்குச்‌ சென்று, மத்திய அமைச்சரைச்‌ சந்தித்து, தமிழக அரசின்‌ நிலையை எடுத்துக்‌ கூற இருப்பதாக, முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்து இருக்கின்றார்‌.

அந்தக்‌ குழுவில்‌ நானும்‌ பங்கேற்க வேண்டும்‌ என, நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌ கேட்டுக்கொண்டார்‌. எனவே, வருகின்ற 25.06.2022 அன்று, சென்னை எழும்பூர்‌ தாயகத்தில்‌ நடைபெற இருந்த, மறுமலர்ச்சி தி.மு.கழக மாவட்டச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ மாற்றி வைக்கப்படுகின்றது. 

உயர்நிலைக்குழு, மாவட்டச்‌ செயலாளர்கள்‌, ஆட்சிமன்றக்குழு, அரசியல்‌ ஆலோசனைக்குழு, அரசியல்‌ ஆய்வு மய்ய உறுப்பினர்கள்‌, தலைமைக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ 28.06.2022 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமை நிலையம்‌ தாயகத்தில்‌ கழக அவைத்தலைவர்‌ திருப்பூர்‌ சு. துரைசாமி தலைமையில்‌ நடைபெறும்‌ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை