வைகோவும் சீமானும் விமான நிலையத்திற்கு வந்தத்தையொட்டி இரு கட்சித் தொண்டர்களும் விமான நிலையத்தில்குவிந்தனர்.

ஏற்கனவே மதிமுக தலைவர் ஃபேஸ் புக்கில் தன்னைப்பற்றி கேலியாக மீம்மீஸ்  போடுவதாகவும் அதனால்தான் மிகவும் மனமுடைந்து இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இருகட்சித் தொண்டர்களும் திருச்சி விமான நிலையம் முன் குழுமியிருந்தனர்,  கோஷம் போடுவதில் சர்ச்சை ஏற்பட்டதில் தொண்டர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர். இதனால் இருகட்சித் தொண்டர்களுக்குள்ளும் மோதல் உருவானது.

கட்சிக் கொடி கம்பைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் நாம் தமிழர் கட்சியினருக்கே அதிக அடி விழுந்ததாக தெரிகிறது.