சர்வாதிகாரியின் கூடாரமாக அதிமுக மாறி வருகிறது என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் இருந்து வருகிறார். சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வந்த இவர் இன்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்துப் பேசினார்.

மேலும் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அமைப்பு காக்கப்பட வேண்டும் எனவும், ரவுடிகள் கைகளில் கட்சி செல்லக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அதிமுக காப்பாற்றப்பட வேண்டும் எனவும் அதிமுகவினர் சசிகலாவை நிராகரிக்க வேண்டும் வேண்டும் என அதிரடியாக கூறினார்.
ஜெயலலிதா நம்பிக்கை பெற்றவர் பன்னீர் செல்வம் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதுகிறேன் எனவும் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரியின் கூடாரமாக அதிமுக மாறி வருகிறது எனவும், தவறானவர்களின் கைகளில் அதிமுக இருக்க நான் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினரின் ஒவ்வொரு தொண்டர்களும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.
