mathusoothanan car attakeed by unknown persons
அதிமுக மூத்த தலைவர் மதுசூதனன் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயல்லிதா உயிரிழந்த 4 நாட்களுக்குப் பிறகு போயஸ் செல்லம் சென்ற மதுசூதனன் அதிமுகவை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சசிகலாவிடம் சரணாகதி அடைந்தார்..
பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி சசிகலா வசம் சென்றதை திடீரென விரும்பாத மதுசூதனன், தடாலடியாக கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் ஓ.பி.எஸ். இல்லத்திற்குச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதனால் ஒருபக்கம் ஓ.பி.எஸ்.சின் ஆதரவையும். மறுபக்கம் சசிகலாவின் எதிர்ப்பையும் ஒரு சேர சம்பாதித்துக் கொண்டவர் மதுசூதனன்
இந்த சூழலில் சென்னை பெரம்பூரில் மதுசூதனன் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் மர்ம நபர்களை கைது செய்யக் கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எதிர்பார்த்த ஒன்று தானே!
