Asianet News TamilAsianet News Tamil

மாஸ்டரா மட்டும் இருங்க... பாஸ்டர் ஆகிவிடாதீங்க... விஜயை நள்ளிரவில் எச்சரித்த வருமான வரித்துறை..!

மதம் மாற்றுவதற்காக கொடுக்கக்கூடாது எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என விடிய விடிய அவரின் வீட்டில் வைத்து விஜய்க்கு கிளாஸ் எடுத்துள்ளனர். 

Mastra only to be a pastor ... Don't become a pastor
Author
Tamil Nadu, First Published Feb 8, 2020, 11:52 AM IST


வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்த நிலையில், நேற்று மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார் விஜய். நெய்வேலி முதல் நேற்று வரை என்ன நடந்தது என வருமானவரித்துறை புலனாய்வு பிரிவில் உள்ள சீனியர்களிடம் விசாரித்தால், ’’நடிகர் விஜய் நடித்த பிகில் படம் 300 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், விஜய்,  மதுரை ஏரியாவை வாங்கி வெளியிட்ட பைனான்சியர் அன்புச்செழியன் அறிவித்த கணக்குகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.Mastra only to be a pastor ... Don't become a pastor

ஆகையால் அதிரடியாக சோதனையில் இறங்க திட்டமிட்டு 160 அதிகாரிகள் கொண்ட 13 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து இயக்குனர் அட்லி தவிர எல்லோர் வீட்டிலும் சோதனை நடத்தினர். இந்தப் படத்திற்காக விஜய்க்கு 50 கோடியை ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அட்லிக்கு 25 கோடிக்கு மேல்  கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் ஆன பிறகும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இதனால் நடிகர் விஜய் விசாரிக்க திட்டமிட்டுள்ளார்கள். Mastra only to be a pastor ... Don't become a pastor

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை தூக்கி வந்து சென்னை பனையூரில் உள்ள விஜயின் பங்களாவில் வைத்து விடிய விடிய சோதனை மேற்கொண்டு ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். இதில் ஏகப்பட்ட ஆவணங்கள் சிக்கியுள்ளன. விஜய் மேடையிலும், சினிமாவிலும் ஆளும் கட்சியை உரசி வருகிறார். அவருக்கு அதிகாரத்தை காட்டத்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. நடிகர் விஜய் எப்போதும் அவரது ஜாகுவார் காரில்தான் படப்பிடிப்புக்குச் செல்வார். படப்பிடிப்பு தளத்தில் நுழைந்து அவரை அழைத்த போது அவரது காரில் வர அனுமதி கேட்டார்.

 

ஆனால் நெய்வேலியை தாண்டியதும் வருமான வரித்துறையினர் அவர்களது இன்னோவா காரில் ஏற்றிக் கொண்டனர். அப்போது காரில் அமர்ந்திருக்கையில், ‘செல்போனில் உயரதிகாரிகளிடம் பேசுவது போல், ’அதெல்லாம் விட மாட்டோம். அடிச்சி தூக்கிடுவோம். சார் எத்தனை பேரை அடித்திருகிறோம்...’என்று பேசுவது போல பேசி வந்திருக்கிறார்கள். அதன் பிறகு விஜய்யின் இருபுறமும் அதிகாரிகள் அமர்ந்து கொண்டு சென்னை வரும் வரை பல்வேறு கேள்விகளால் துளைத்து  எடுத்து இருக்கிறார்கள். 

லண்டனிலுள்ள விஜயின் மாமனார் சொர்ணலிங்கத்திடம் பேசியுள்ளனர்.  லண்டன், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சொர்ணலிங்கம் அவரது மகள் சங்கீதாவின் பெயரிலும் உறவினர்கள் பெயரிலும் வாங்கிப்போட்டுள்ள ஹோட்டல், சூப்பர் மார்க்கெட், ஜுவல்லரி கம்பெனி உள்ளிட்ட பங்கு குறித்து அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதாவது ஆயிரத்து 200 கோடிகளுக்கும் மேலாக சொத்துக்கள், சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கி குவித்த சொத்துக்கள் சென்னை, இலங்கை, மும்பை, கூர்க் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை காட்டவும் ஒரு கணம் விஜய் அதிர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். Mastra only to be a pastor ... Don't become a pastor

இந்த சொத்துக்களை எல்லாம் ஐடியில் பைல் செய்தால் உங்கள் நிலைமை மோசமாகும் என்று சொல்லவும் அதிர்ந்து இருக்கிறார் விஜய். ’25 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துகள்’என பதில் அளித்துள்ளார். அவற்றை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். முதலில் நீங்கள் வாயை கட்டுப்படுத்த வேண்டும். அதே போன்று நீங்கள் ஜேப்பியார் மக்கள் ரெஜினா தொடர்பில் இருக்க கூடாது. கிறிஸ்தவ மிஷனரிகள் உங்கள் மூலமாக தான் பல்வேறு நிதி திரட்டி அனுப்பி வைப்பதாக சொல்கிறார்கள். மதம் மாற்றுவதற்காக கொடுக்கக்கூடாது எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என விடிய விடிய அவரின் வீட்டில் வைத்து விஜய்க்கு கிளாஸ் எடுத்துள்ளனர். இதனால் ஐடி டீலீங்கில் விஜயிடம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios