Asianet News TamilAsianet News Tamil

மெரினா போராட்டம் என்பது வெட்கக்கேடு... ஜல்லிக்கட்டை நிறுத்துங்கள்... தாமரை கடும் எதிர்ப்பு..!

மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை !
 

Marina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposed
Author
Tamil Nadu, First Published Jan 17, 2022, 4:57 PM IST

ஜல்லிக்கட்டு தமிழர் இனத்தின் அடையாளம், வீர வரலாறு, உணர்ச்சி கொண்ட்டாட்டம், பாரம்பரியம் எனக்கோரி அவற்று தடை வந்த போது மெரினாவில் ஒரு பெரும் புரட்சியே வெடித்தது. இதுதான் தமிழர் ஒற்றுமை என உலகமே வியந்தது. இதனை அடுத்தே அனுமதி கொடுக்கப்பட்டது. தற்போது ஜல்லிக்கட்டு மாடுகளை தங்கள் வீட்டுப்பிள்ளைகளாவே பாவித்து வருர்கின்றனர். தற்போது பெண்களே ஜல்லிக்கட்டுக்கு வந்து வாடி வாசலில் கம்பீரமாக ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டு பரிசுகளை வாங்கிச் செல்கின்றனர். 

இந்நிலையில் சல்லிக்கட்டே கொண்டாடக் கூடாது என எழுத்தாளரும், பாடலாசிரியருமான தாமரை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’இப்படிச் சொல்லுவதால் எத்தகைய எதிர்ப்பு எழும் என்று எனக்குத் தெரியும். என்னென்ன விதமான வசவுகள் வந்து விழும் என்றும் தெரியும். இருந்தாலும் அப்பாவி விலங்குகளுக்கு வாயில்லை, பேச முடியாது என்பதால் அவற்றுக்காக நான் பேசுகிறேன். என்னை அடியுங்கள், வாயில்லா உயிர்களை விட்டுவிடுங்கள்.Marina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposed

 இதுநாள்வரை பாரம்பரியம்/பன்னெடுங்கால வழக்கம் என்பதன் அடிப்படையில் 'சல்லிக்கட்டு' என்னும் 'காளை விளையாட்டு' ஆடப் பட்டிருக்கலாம். ஆனால், விலங்குகளின் உரிமை எனும் பார்வையில் உலகம் விழித்துக் கொண்ட வேளை இது ! இனியும் சல்லிக்கட்டு போன்ற, மனிதன் விலங்குகளை அச்சுறுத்தும் அநாகரீக விளையாட்டு தேவையில்லை. சேவல் சண்டை, ஆட்டு சண்டை, நாய்ச்சண்டை,ரேக்ளா பந்தயம், குதிரைப் பந்தயம் உள்ளிட்ட அனைத்து விலங்குவாதை விளையாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

விலங்குகள் உயிர் மட்டுமல்ல, உணர்வும் உள்ளவை. அவற்றுக்கு வலி, வேதனை, அச்சம், அதிர்ச்சி, பாசம் அனைத்தும் உண்டு. அவற்றை விளையாட்டுப் பொருளாக்குவது நமக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம், அவற்றுக்கு அது நிச்சயம் வாதையே !Marina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposed

எந்த விளையாட்டிலும் இருதரப்பு இருக்கும், இருதரப்புக்கும் விளையாட்டின் விதிமுறைகள் தெரிந்திருக்கும், அவற்றை ஏற்றுக் கொண்டே விளையாட வந்திருப்பார்கள். ஆனால் சல்லிக்கட்டு போன்ற விலங்கு விளையாட்டுகளில் மறுதரப்பான விலங்குகளுக்கு விதிமுறை தெரியாது... அது விளையாட்டு என்றே தெரியாது !  மறுதரப்பால் ஏற்றுக் கொள்ளப்படாத விளையாட்டை விளையாட்டு என்று சொல்வதே குற்றம் !. அதன் பெயர் வன்முறை !


 நினைவு தெரிந்தநாள் முதல் நான் விலங்கு-மனிதன் விளையாட்டுகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். சில ஆண்டுகளுக்குமுன் மெரினாவில் நடைபெற்ற 'சல்லிக்கட்டு'ப் புரட்சியின்போதுகூட அதற்கு ஆதரவாக நான் நிற்கவில்லை. புரட்சி செய்ய ஆயிரம் காரணங்கள் இருக்க போயும் போயும் சல்லிக்கட்டை முன்னிறுத்தி சமூகம் திரண்டது வேதனையளித்த நிகழ்வு !  விலங்குரிமைக் குரல்கள் எழும்பி மேல் வரும் இன்றைய சூழ்நிலையில் நான் அவற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கிறேன். Marina fight is a shame ... Stop jallikkattu ...Thamarai is strongly opposed
  
இவற்றை எதிர்ப்பதால் தமிழர் அடையாளம் இழப்பர் என்பது தவறான பார்வை. தமிழர் அடையாளமாக வேறு ஏராளமான வழக்கங்கள் உள்ளன. அவற்றை வளர்த்தெடுப்போம். உதாரணமாக 'தமிழர் தமிழிலேயே பேசுவது', 'மம்மி டாடியைக் கைவிடுவது' 
 சல்லிக்கட்டுக்கும் விலங்கு விளையாட்டுக்கும் எதிரான கருத்துள்ளவர்கள் குரலெழுப்புங்கள். 

 நம் குரல் ஓங்கி ஒலித்தால், மெரினா அலையை விடவும் பெரிதாக இருக்கும், விலங்கு சமூகத்தின் வாழ்த்தும் கிடைக்கும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி இருக்கிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios