என் மீது பரப்பும் பொய்களை நிறுத்திவிட்டு இதுவரை கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுக்க முயற்சிக்க வேண்டும் என மாரிதாஸ் எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’போலியாக என் பெயரில் தவறான தகவல்களை திமுக - திக பரப்புவதை விட்டுவிட்டு கொஞ்சம் நேர்மையாக எதிர்கொள்ளவும். மதம் மொழி ஜாதி என்று நான் மக்களைப் பிரித்துத் தூண்டிவிட்டேன் என்று பரப்பும் பொய்களையும், நிறுத்திவிட்டு இதுவரை கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுக்க முயற்சிக்கவும்’’ எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ‘’உங்களிடம் தான் திமுகவைப் பற்றி சில ஆதாரம் உள்ளதே நீங்கள் சிபிஐ இடம் கொடுங்கள் அமலாக்கத்துறை இடம் கொடுங்கள்.  அல்லது இந்திய உளவுத்துறை இடம் கொடுங்கள். உங்கள் நேர்மையான உண்மையான ஆதாரத்தை... ஏன் ட்விட்டரிலும் யூடியூபிலும் கதறுகிறீர்கள். உங்களுக்கு ஆதரவாளர்கள் வேற..’’ என ஒருவர் கூறியுள்ளார். 

’’அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே நாம் செய்வதுபோல் காட்டுகிறார்கள் அவர்கள் அவ்வளவு தான் இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் ஏனென்றால் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் ஜெய்ஹிந்த்’’ எனவும், ’ஒருவன் தன்னை கேள்வி கேட்டுவிட்டான் என்றவுடன் பதிலளிக்க முடியாதவர்கள் அவனை கிண்டல் அடித்து அவன் வாயை மூட செய்ய முயற்சிப்பார். பைத்தியக்காரன் என்று உங்களை குறை சொன்னவர்களுக்கு என் பதில் உலகின் மிகப்பெரிய வல்லுநர்களை இந்த உலகம் பைத்தியக்காரன் என்று தான் சொலியிருக்கிறது.

பதில் இல்லாத காரணத்தால் தான் இத்தகைய கீழ்த்தரமான வேலைகளை சிலர் செய்கிறார்கள் போல. தமிழ்நாட்டில் பலவருடம் ஆட்சி செய்த ஒரு பாரம்பரியம் மிக்க கட்சி ஒரே ஒரு தனிமனிதன் மாரிதாஸால் இந்தளவுக்கு கீழே இறங்கிவிட்டதே என்று என்னும் போது ஒருபக்கம் வருத்தமளிக்கிறது’’ என ஆதரவளித்து வருகின்றனர்.