திமுக- அதிமுக என்று வோட்டு போட்டு பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதிகளாக வெளிப்படையாகத் தெரிந்தும், திரும்பத் திரும்ப வோட்டு போடுவது அசிங்கம் என  எழுத்தாளர் மாரிதாஸ்  கூறியுள்ளார்

.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’நரேந்திர மோடி அவரின் நடுத்தர குடும்பப் பின்னணியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது 70 தலைமுறைக்குச் சொத்து சேர்த்த திராவிட கட்சிகளின் தலைமை அவர்களது  குடும்பம், அடிமைகள் என்று தமிழகம் இருக்க,  மிக எளிமையின் வடிவம் கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு இந்த டி.ராஜா மாநிலங்கள் எம்.பி., அவர் மனைவி கட்சித் தலைவர்களில் ஒருவர், அவர் மகள் டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் அணித் தலைவி இந்தக் குடும்பமே மக்கள் பணத்தில் ஜோராக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறது. 

இன்னும் சில ஜாதி ஒழிக்கப் போகிறேன் என்று கூறி ஜாதி அரசியல் செய்யும் கட்சிகள் கட்டப் பஞ்சாயத்துக் கூட்டங்கள், தேசப் பிரிவினை ஓநாய்கள்,  அட இங்கே சாதாரண வார்டு கவுன்சிலர் கூட கோடிஸ்வரர்களாக வலம் வரும் கேடு கெட்ட அரசியல் உலகில் தன் குடும்பத்திற்கு எந்த ஆதாயமும் தேடாத 13 வருடம் முதல்வராகவும் 5 ஆண்டு மேல் ஒரு நாட்டின் பிரதமராகவும் இருந்துவரும் நரேந்திர மோடியை ஆதரிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் எப்போதும் இல்லை.

திமுக- அதிமுக என்று வோட்டு போட்டு அந்த மாவட்டச் செயலாளர் முதல் கட்சித் தலைவர்களின் துணைவியார் மனைவியர் குடும்பம் வரை பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதிகளாக வெளிப்படையாகத் தெரிந்தும், திருந்தாமல் திரும்பத் திரும்ப அவர்களுக்கே வோட்டு போடும் அசிங்கத்தைவிட ஒரு நேர்மையான மனிதருக்கு நான் ஆதரவாகச் செயல்படுவதில் எந்தத் தயக்கமும் எனக்கு இல்லை.

திக - திமுக கம்யூனிஸ்ட் அயோக்கியர்களின் கூடாரமாக மாறிவிட்ட தமிழக செய்தி நிறுவனங்களைத் தாண்டி களத்தில் மக்களிடம் உண்மையைக் கொண்டு செல்ல என்னால் முடிந்த முயற்சியை நிச்சயம் செய்ய விரும்புகிறேன். அறிவியல், பொருளாதாரம், அரசு நிர்வாகம், கல்வி, நீதித் துறை, ராணுவம் என்று அனைத்திலும் மோடி எடுக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் அதன் நோக்கங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்ல மாரிதாஸ் ஆகிய நான் என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் முயல்வேன்.

மோடி என்ற தனி நபர் அடையாளமாக இதைச் செய்கிறேனா ? இல்லை மோடி என்ற நபர் தனி நபராக நான் பார்ப்பது இல்லை. ஒரு தேசத்தின் மீதும், தேசத்தின் ஆன்மா மீதும் நம்பிக்கையுள்ள சிறந்த தேசியவாதிக்கு பக்கபலமாக நிற்பது ஒரு நல்ல குடிமகனாக என் கடமை என்று கருதுவதால் நான் இதைச் செய்து கொண்டுள்ளேன்’’ என அவர் தெரிவித்துள்ளார். 

அவர் ரஜினி ஆதரவாளர் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்தப்பதிவு மூலம் அவர் நேரடியாகவே தன்னை மோடி ஆதரவாளராகக் காட்டிக் கொண்டு விட்டதால் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.