கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டும், இக்கட்டான சூழ்நிலையை வெல்ல "பிஎம் கேர்ஸ்"- க்கு மக்களால் இயன்ற  நிதியுதவி வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

அதன் படி, நாட்டின் இந்த இக்காட்டான சூழ்நிலையில் நமது பங்கும் இருக்க வேண்டும் என நினைத்த நடிகர் அக்ஷய் குமார், தொழிலதிபர் ரத்தன் டாடா , டிவிஎஸ் நிறுவனம், ரிலையன்ஸ் குழுமம் என  பெரும் தொழிலதிபர்கள் பலரும் கோடிகளில் வாரி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக சார்பில்1 கோடி ரூபாய் மட்டுமே தமிழக மக்களுக்காக வழங்கப்பட்டு உள்ளது. இதனை மேற்கோள் காட்டும் பொருட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சாந்தியின் போது சில  கருத்தை முன் வைத்து பேசியுள்ளார். 


   
அதில், சென்னை முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளை பார்வையிட்டு மக்களுக்கு பணமும், ரேஷன்
 பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்களை வாங்க வரும் மக்கள் கட்டாயம் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து  இருந்தார். மேலும் அரசின் உத்தரவு மீறி வங்கிகள் பொதுமக்களிடம் இ.எம்.ஐ வசூலித்தால் கடும் நடவடிக்கை பாயும் எனவும் குறிப்பிட்டார்

தொடர்ந்து பேசிய அவர், கடலில் கரைத்த பெருங்காயம் போல... திமுக ஒரு கோடி தான் கொடுத்து இருக்காங்க. வட நாட்டில் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் அம்பானி முதல் பல தொழிலதிபர்கள் வரை கோடிக்கணக்கில் மக்களுக்கு கொடுத்து இருக்காங்க.. ஆனால் மாறன் பிரதர்ஸ் அமைதியா இருக்காங்க". அவர்களுக்கு இருக்கும் வசதிக்கு 1000 கோடி ரூபாய் தரலாம். அப்படி கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...நான் பேசுவது அவர்கள் காதுக்கு கட்டாயம் செல்லும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.