பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கில் குற்றபத்திரிக்கையை வாங்க தயாநிதி மாறன், கலாநிதிமாறன், தயாநிதி உதவியாளர் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

மத்தியில் கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன்.

அப்போது 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் தனது போட் ஹவுஸ் இல்லத்தில் இருந்து முறைகேடாக பயன்படுத்தியதாக தயாநிதி மாறன் மீது புகார் எழுந்தது.

இதனால் அரசுக்கு ரூ.440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எஸ்.குருமூர்த்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் பி.எஸ்.என்.எல் இணைப்பில் முறைகேடாக பயன்படுத்தி வந்த தொலைபேசி எங்கள் கண்டறியப்பட்டன. மேலும் சன்டிவி வரை இந்த இணைப்புகள் தொடர்பில் உள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பியது. இதைதொடர்ந்து விசாரணையும்  நடத்தியது.

இதையடுத்து பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தயாநிதி மாறன் மீதும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில் அந்த குற்றபத்திரிக்கையை வாங்க தயாநிதி மாறன், கலாநிதிமாறன், தயாநிதி உதவியாளர் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் aaஆஜராகினர். 

அப்போது சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை நகல் தயாநிதி உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்பட்டது.