நாம் தமிழர் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பேசிய அவர்,

நான் திண்டுக்கல் தான்.. இந்த மாவட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இங்கே உள்ள மணல் முழுவதையும் காலி செய்துவிட்டார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை என்ற கிராமத்தில் சுத்தமாக குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். 

என்னுடைய அலுவலகத்தை இந்த கிராமத்தில் அமைத்து அங்கு உள்ள கிராம மக்களுக்கு குடி தண்ணீரை வழங்க ஏற்பாடு செய்வதே முதல் வேலையாக வைத்துள்ளேன். நான் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் இருக்கையில் சும்மா அமர்ந்து விட்டு வரமாட்டேன் எதையும் எழுந்து நின்று கேள்வி கேட்பேன்.

என்னை இங்குள்ள மக்கள் கேட்கிறார்கள் நல்லது பண்ணுவியா என்று நான் சொல்கிறேன்.. "கெட்டது தான் செய்யப்போகிறேன்" கெட்டது பண்றவங்களுக்கு கெட்டது செய்யப்போறேன்... அது பொள்ளாச்சி விஷயமாக இருந்தாலும் சரி... வேறு எந்த விஷயமாக இருந்தாலும் சரி பொள்ளாச்சி விஷயத்தில் தப்பு பண்ணுவங்க தலைய வெட்டணும் என ஆவேசமாக பேசியுள்ளார் மன்சூரலிகான்.

மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு அங்குள்ள மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்