Mannargudi family in fear
பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த சசிகலா, தமது சொத்துக்களை பினாமி பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை சோதனையில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று அதிமுக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலக் குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிறையில் இருந்து சசிகலா பரோலில் வெளியே வந்தார். பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. 4 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா, தினமும் மருத்துவமனை சென்று கணவர் நடராஜனை கவனித்துக் கொண்டார். பரோல் காலம் முடிந்த நிலையில் சசிகலா மீண்டும் சிறைக்கு சென்றார்.

சசிகலா பரோலில் வெளிவந்த சமயம் 600 சொத்துக்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா
தொலைக்காட்சியில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மிடாஸ் மது ஆலை, கோடநாடு எஸ்டேட், கிருஷ்ணபிரியா மற்றும் விவேக் ஜெயராமனின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. தற்போது சோதனையில் சிக்கிய ஆவணங்களை மதிப்பிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட்-ன் மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரோலில் வெளிவந்த சசிகலா, ரகசியமாக தமது சொத்துக்களை உறவினர்கள் மற்றும் பினாமி பெயர்களில் பத்திரபதிவு செய்துள்ளது தொடர்பாக சோதனையில் வெளிவந்துள்ளதாக தெரிகிறது. இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் ஆகியோர் பெயர்களில் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பத்திரப்பதிவு மாற்றப்பட்டது, சென்னையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு அதிகாரிகளை வரவழைத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள், அனைத்தும் புதிதாக மாற்றம் செய்யப்பட்டவை என்றும், சுடச்சுட கையெழுத்து போட்ட ஆவணங்களாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படாதபாடுபட்டு பரோலில் வெளிவந்த சசிகலா, கணவரை பார்க்கப்போன கேப்பில் தமது சொத்துக்களை பினாமி பெயர்களில் பதிவு செய்தார். மொத்த சொத்துக்களையும் சொந்தபந்தங்களின் பெயர்களில் மாற்றி எழுதினார். அது
மட்டுமல்லாமல், சொந்தபந்தங்களுக்குள்ளே இருக்கும் பிரச்சனைகளை சரிகட்டிவிட்டு மீண்டும் சிறைக்கு சென்றார்.

பரோலில் வெளிவந்த சசிகலா, மொத்த பிரச்சனையையும் முடித்துவிட்ட திருப்தியோடு மீண்டும் சென்ற சசிக்கு, தனது சொந்த தம்பி மகனால் வந்தது மொத்த பிரச்சனை. அது என்னன்னா... சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த சிடி தங்களிடம் இருப்பதாக ஜெயானந்த் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டார். ஜெய் ஆனந்தின் இந்த பதிவால், சசியின் மொத்த குடும்பத்தினரும் ஒத்துக்கொள்ள
வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் அந்த சிடியை வெளியிட்டால் சசிகலா குற்றமற்றவர் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும் என அவர்கள் தெரிவித்தனர். ஜெய் ஆனந்தின் செய்த சிறுபிள்ளைத்தனத்தால், மொத்த குடும்பத்தையும் சுற்றி வளைத்தது வருமான வரித்துறை. இதற்கு ஆப்ரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தினாலும், இதற்கு உண்மையான காரணம் சிடி தான் என கதறுகிறது மொத்த மன்னார்குடி
குடும்பம்.
