முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் இந்திய பிரதமருமான மன்மோகன் சிங் ஐந்து முறை மேல்சபை எம்.பி.யாக இருந்துள்ளார். இந்த ஐந்து முறையும் அசாம் மாநிலத்தில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source

கடைசியாக இவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. அசாம் மாநிலத்தில் இருந்து தற்போது அவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பில்லை.


காலியாக உள்ள ஒரு இடத்திற்கு ஆகஸ்ட் 26-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்மோகன் சிங்கை ராஜஸ்தானில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
