Maniyarasan attack by unknown person in tanjore

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன், தஞ்சையில் மடாம நபர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தமிழ்த்தேசிய பேரியக்க தலைவரும் காவிரி உரிமை மீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் காவிரி பிரச்சனை தொடங்கி ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன் திட்டம் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை உடனுக்குடன் கண்டித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 9.35 மணிக்கு சென்னை செல்வதற்காக தனது வீட்டில் இருந்து உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நீண்ட தூரத்திலிருந்து அவர்களை கண்காணித்து வந்த 2 மர்ம நபர்கள் காவேரி நகரில் இருட்டுப் பகுதியில் வரும் போது மணியரசன் கையில் வைத்திருந்த பையை இழுத்து அவரை கீழே தள்ளிவிட்டதோடு மட்டுமல்லாமல் தாக்கிவிட்டும் சென்றனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மணியரசனுக்கு கை மற்றும் கால்களில் சிராய்ப்புடன் கூடிய காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து பலரும் மணியரசனைப்ப பார்த்து நலம் விசாரிக்க செல்கின்றனர்.
மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்தும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழின உணர்வாளர்கள் இன்று தஞ்சையில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.