மாணிக்கம் தாகூர்  கடந்த 2009 ஆம் ஆண்டு விருதுநகர் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2104 ஆம் ஆண்டு அவர் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மக்களவை காங்கிரஸ் கொறடாவாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணிக் தாக்கூரை கொறடாவாக நியமனம் செய்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்