மதுரை அருகே இருதரப்புக்குஇடையே சாமி கும்பிடுவதில் பிரச்சனை ஏற்பட்டது.இதில் ஒரு சமூகத்தை சேர்ந்தவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி கிராம மக்கள் பிணத்தை ஊர் மந்தையில் போட்டு விடிய விடிய போராட்டம் நடைபெற்றது.அந்த ஊரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் கிராமம் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது.

மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகிலுள்ள சூலபுரம் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. ஆண்டு தோறும் இக் கோயிலில் அக்டோபரில்(புரட்டாசி) இரண்டு திருவிழா நடப்பது வழக்கம். சூலபுரம், உலைப்பட்டி கிராமத்தினர்  விழாவில் பங்கேற்பர். கடந்த இரு ஆண்டாகவே திருவிழா கொண்டாடுவதில் இருவேறு சமூகத்தினரிடையே வழிபாடு முறை, விழாவில் பங்கேற்பது தொடர்பாக சில பிரச்னைகள் உருவானது. வருவாய், காவல் துறையினர் சமாதான பேச்சு வார்த்தைக்குபின், நிபந்தனைகளுடன் திருவிழா கொண்டாட அனுமதிக்கப்பட்டது.


இந்தநிலையில் இந்தாண்டுக்கான திருவிழா அமைதியான முறையில் கொண்டாட ஏற்கனவே சில நாளுக்கு முன்பு, வருவாய் துறையினர் காவல் துறையினர்  இரு தரப்பு முக்கிஸ்தர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர். திருவிழா அமைதியாக நடக்க  ஒத்துழைக்கவேண்டும், விழாவில் பங்கேற்பது குறித்தும் பேசி முடிவு செய்யப்பட்டது. இதன்பின்னரே திட்டமிட்டபடி, அக்டோபர்., 13-ம் தேதி திருவிழா தொடங்கி நடந்தது. 2-வது நாளான நேற்று விழா கொண்டாடிய போதிலும், கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய சூலபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி செல்லத்துரை(43) என்பவர் உலைப்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் அருகில் இறந்து கிடப்பது தெரிந்தது. அவரது தலையில் பின்பகுதியில் பலத்த காயம் மூலம் ரத்தம் கொட்டியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற மக்கள் அங்கு திரண்டனர். கோயில் திருவிழாவை  சீர்குலைத்து, நிறுத்தும் நோக்கில் மற்றொரு தரப்பினர் செல்லத்துரையை தகாத வார்த் தைகளால் திட்டி தலையில் அடித்து அவரை கொலை செய்திருப்பதாக செல்லத்துரை குடும்பத்தினர் மற்றும் அவர் சார்ந்த சமூகத்தினர் புகார் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து, எம். கல்லுபட்டி காவல் ஆய்வாளர் தினகரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். செல்லத்துரையின் உடலை மீ்ட்டு, விசாரிக்க முயன்றனர். ஆனாலும் உடலை எடுக்கவிடா மல் தடுத்து, ரோட்டில் போட்டு மறியல் செய்தனர்.

 கொலையாளிகளை உடனே கைது செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணம் வழங்க வேண்டும் என, அவர்கள் கோஷமிட்டு வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், எஸ்பி சுஜித்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்தனர். அவர்களும் போராட்டக் காரர்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் அவர்கள் கேட்க மறுத்து தொடர்ந்து போராடினர்.  புகாரில் தெரிவிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைக்கவேண்டும் என, வருவாய்த்துறை காவல்துறை அதிகாரி களின் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின், நேற்று மதியத்திற்கு மேல் செல்லத்துரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்மதித்த நிலையில், அவரது உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

இதற்கிடையில் கொலையுண்ட செல்லத்துரையின் மனைவி மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த நல்லாள் மகன் தங்கப்பன், மகாலிங்கம் மகன் அய்யனார், சங்கிலிமுத்து மகன் பன்னீர்செல்வம், கருப்பணன் மகன் காளியப் பன், அழகர் மகன் பாண்டி, வாசி மகன் செல்லப்பன், தங்கப்பனின் மருமகன், செல்லையாபுரம் கர்ணன், கணபதி,  கட்டாரிபட்டி ஈஸ்வரன், அழகர், சென்னியப்பன் மகன் போத்திராஜ் ஆகிய 12 மீது எம்.கல்லுபட்டி போலீஸார்  கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடுகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  தொடர்ந்து 2 ஆண்டாகவே திருவிழா கொண்டாடுவதில் இரு தரப்புக்கு இடையே பிரச்னை நீடித்தது. ஒவ்வொரு முறையும் சமரச பேச்சு  நடத்தி, நிபந்தனைகளுடன் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முறையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பி னும், திருவிழாவுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப் பட்டது. ஆனாலும், செல்லத்துரை என்பவரை ஒரு தரப்பினர் கொலை செய்தனர் என, மற்றொரு தப்பினர் குற்றம் சாட்டுக் கின்றனர். செல்லத்துரைக்கு தலையில் காயம் உள்ளது. அவர்  மலையடிவாரத்திலுள்ள தோட்டத்தில் உள்ள வீட்டில் இருந்த கோயிலுக்கு வந்தபோது, இறந்ததாக கூறப்படுகிறது. புகாரில் கோயிலில் இருந்து வீட்டுக்கு போகும்போது  கல்லால் தாக்கி கொல்லப் பட்டார் என, தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனையில் அவர் எப்படி இறந்தார் என்ற விவரம் தெரியவரும். புகாரில் தெரிவித்த படி, 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, என்கிறது போலீஸ்.