மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து  முதலமைச்சர்  மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. 

அதில் பங்கேற்றுப் பேசிய மம்தா பானர்ஜி , தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மக்கள் அனைவரும் என்னுடன் கைகோர்க்க வேண்டும். ஜனநாயகத்தை காக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என தெரிவித்தார்..

மோடி, இந்தியாவின் பிரதமர். ஆனால், அவர் எப்போதும் பாகிஸ்தானைப் பற்றியே பேசி வருகிறார். இதற்கு காரணம் என்ன?  என கேள்வி எழுப்பினார். அவர் என்ன இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தான் பிரதமரா ? என கிண்டல் செய்தார். நாம் அனைவரும் இந்தியர்கள். நமது நாட்டு விவகாரங்கள் குறித்து மட்டும் பேசலாம் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.