Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் முதல்வராகும் மம்தா, பினராயி விஜயன்.. அஸ்ஸாம்-புதுச்சேரியில் என்டிஏ ஆட்சி.. கருத்துக்கணிப்பில் அதிரடி!

மேற்கு வங்காளம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Mamta and Binarayi Vijayan to become Chief Minister again.. NDA rule in Assam-Puducherry..!
Author
Delhi, First Published Feb 27, 2021, 10:21 PM IST

மேற்கு வங்காளம், தமிழகம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற்றால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ஐ.ஏ.என்.எஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.Mamta and Binarayi Vijayan to become Chief Minister again.. NDA rule in Assam-Puducherry..!
அஸ்ஸாமில் பாஜக கூட்டணி 43.8 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41.4 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 68 - 76 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 43 - 51 தொகுதிகளிலும் வெல்லும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.Mamta and Binarayi Vijayan to become Chief Minister again.. NDA rule in Assam-Puducherry..!
கேரளாவில் இடதுசாரி கூட்டணி 40.1 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் கூட்டணி 32.6 சதவீத ஓட்டுகளையும் பாஜக 12.7 சதவீத ஓட்டுகளையும் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி கூட்டணி 83 - 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 47 - 55 தொகுதிகளிலும், பாஜக 0 -2 தொகுதிகளிலும் வெல்லும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Mamta and Binarayi Vijayan to become Chief Minister again.. NDA rule in Assam-Puducherry..!
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 36.2 சதவீத ஓட்டுகளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 45.8 சதவீத ஓட்டுகளையும் மக்கள் நீதி மய்யம் 3.5 சதவீத வாக்குகளையும் பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 8 - 12 தொகுதிகளிலும், என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 17 - 21 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 0 -1 தொகுதியில் வெல்லும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Mamta and Binarayi Vijayan to become Chief Minister again.. NDA rule in Assam-Puducherry..!
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 42.8 சதவீத வாக்குக்ளைப் பெறும் என்று கருத்துக்கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 38 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 12.9 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் 148 - 164 தொகுதிகளிலும், பாஜக 92 - 108 தொகுதிகளிலும், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி 31 - 39 தொகுதிகளிலும் வெல்லும் எனக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios