Asianet News TamilAsianet News Tamil

சபாஷ் நாயுடு.. வாங்க எல்லாரும் சேர்ந்து பாஜகவை விரட்டுவோம்!! மம்தா அதிரடி

mamata banerjee welcomed chandrababu naidu action against bjp
mamata banerjee welcomed chandrababu naidu action against bjp
Author
First Published Mar 16, 2018, 11:07 AM IST


பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியதற்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசிற்கு எதிராக தேசிய ஓங்கி ஒலிக்கும் குரல்களில் பிரதானமானது மம்தா பானர்ஜி குரல். பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய அணியை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் மம்தா பானர்ஜி. இதுதொடர்பான தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் அழைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள மம்தா, திமுகவிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியதற்காக சந்திரபாபு நாயுடுவிற்கு மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். நாட்டை பேரழிவில் இருந்து காக்க தேவையான நடவடிக்கை இது என மம்தா பானர்ஜி டுவீட் செய்துள்ளார். 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I welcome the TDP&#39;s decision to leave the NDA. The current situation warrants such action to save the country from disaster</p>&mdash; Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/974509731845832705?ref_src=twsrc%5Etfw">March 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

அரசியல் ஸ்திரமின்மை, பொருளாதார பேரிடர், அட்டூழியங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் எனவும் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I appeal to all political parties in the Opposition to work closely together against atrocities, economic calamity and political instability</p>&mdash; Mamata Banerjee (@MamataOfficial) <a href="https://twitter.com/MamataOfficial/status/974512426782670848?ref_src=twsrc%5Etfw">March 16, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

Follow Us:
Download App:
  • android
  • ios