male sexual appetite is the reason for women sexual assault

ஆண்களின் பாலின வேட்கையே பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணம் என உயர் நீதிமன்ற நீதிபதி கருணாகரன் தெரிவித்துள்ளார்.

60 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 2 இளைஞர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அவர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:

18 மாத கைக்குழந்தை முதல் 100 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆண்களின் பாலின வேட்கையே பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம். இணையதளம், தொலைக்காட்சிகள் மூலம் பாலியல் தொடர்பான தகவல்கள் எளிதாக கிடைப்பதும் பாலியல் குற்றங்களுக்கு காரணமாக அமைகின்றன என நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பாலியல் வன்கொடுமைகள் எத்தனை? அவற்றில் எத்தனைக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன? பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நன்னெறிக் கல்வியை ஏன் அரசுகள் சேர்க்கக்கூடாது? திரை பிரபலங்கள், சமூக அந்தஸ்து உடையவர்களை வைத்து விழிப்புணர்வு குறும்படம் ஏன் எடுக்கக்கூடாது? பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன தொழில்நுட்ப சாதனங்கள் ஏன் வழங்கக்கூடாது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி கிருபாகரன் இதுதொடர்பாக ஜனவரி 10ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.