நடிகா் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெயரை இந்திய தே்ாதல் ஆணையம் இன்று பதிவு செய்தது. 
நடிகர் கமல்ஹாசன்  கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி  ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். இதையடுத்து மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயா் மற்றும் கொடியை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

இதனைத் தொடா்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியை முறையாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அதன் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்வதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் மே 31ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால்  மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கு யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் கமல்ஹாசன்  கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆணையத்தின் முன்பு ஆஜரானார். அப்போது கட்சியின் பெயரை பதிவு செய்தற்கான நடைமுறைகள் தேர்தல் ஆணைண்ம் மேற்கொண்டது

இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தோ்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.