டந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையத்திற்கு  கிட்டத்தட்ட 4 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார்.

வேலூரில் நடைபெற்ற மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், 2021 ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான் தங்களது இலக்கு என்ற எண்ணத்துடன் மக்கள் நீதி மய்யம் பயணித்து வருகிறது.

இந்நிலையில் கட்சியை  வலுப்படுத்துவதற்காக  கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கட்சியில் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் தலைவர் , துணைத் தலைவர் , செயலாளர் , பொதுச்செயலாளர் 6 பேர் செயலாளர் என்ற முறையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மயத்தில் 2  பொதுச் செயலாளர்கள் செய்லபட்டு வந்த நிலையில் மேலும் 4 பொதுச்செயலாளர் பதவிகளும் 16 மாநிலச் செயலாளர் பதவிகளும்  உருவாக்கப்பட்டுள்ளன. அருணாச்சலம் , மௌரியா , ரங்கராஜன் , உமாதேவி மற்றும் பசீர் அகமது பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஒவர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

மேலும் கட்சியை நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில் சென்னை , காஞ்சிபுரம் , சேலம் ,கோவை , விழுப்புரம் , திருச்சி , மதுரை , திருநெல்வேலி என எட்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஒவ்வொரு ஒருங்கிணைப்பு பிரிவின் கீழும் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .