மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ஸ்ரீப்ரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கமீலா நாசர், கவிஞர் சினேகன் இடம்பிடித்துள்ளனர். 

கடந்த 21 ஆம் தேதி மதுரை ஒத்தக்கடையில் நடிகர் கமலஹாசன் தனது கட்சி பொதுக்கூட்டடத்தை நடத்தினார். அங்கு கட்சியின் கொடியை ஏற்றிவைத்து மக்கள் நீதி மய்யம் என்ற பெயரையும் அறிமுகம் செய்தார். 

வெள்ளை நிறத்தில் சிவப்பு வெள்ளை இணைந்த ஆறு கைகள் நடுவில் கறுப்பில் நட்சத்திரம் சின்னம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தி நிர்வாகிகளையும் அறிமுகப்படுத்தினார். 

அதில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் உள்ளனர். 

இந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கோண்டு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் பங்கேற்றதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த கட்சியின் பேச்சாளர் பட்டியலை கமலஹாசன் வெளியிட்டுள்ளார். அதில், நடிகை ஸ்ரீப்ரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கமீலா நாசர், கவிஞர் சினேகன் இடம்பிடித்துள்ளனர்.