அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்..! தேர்தல் பிரச்சாரத்தை மறந்த கமல்.. நடுத்தெருவில் மக்கள் நீதி மையம்..!
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மக்கள் நீதி மையம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.
கடலூர் திருப்பூர் நிர்வாகிகளை தொடர்ந்து நெல்லை நிர்வாகிகள் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளனர். இதேபோல் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் மக்கள் நீதி மையம் நீக்கியுள்ளது. இதன் மூலம் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியில் சுமார் ஐந்து மாவட்டங்களில் பிரச்சனை வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
இதற்கெல்லாம் காரணம் கமலுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் என்றுதான் துவக்கத்திலிருந்தே தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் விலகலுக்கு காரணம் அக்கட்சியின் வேட்பாளர் தான் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மையம் கட்சியின் நெல்லை வேட்பாளரான வெண்ணிமலை லோக்கல் கட்சி நிர்வாகிகளை அலட்சிய படுத்துவதாகவும் மாவட்ட நிர்வாகிகளை கண்டுகொள்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட இல்லாமல் வெண்ணி மலை தனியாகவே செல்வதாகவும் தேர்தல் செலவுக்குப் பணத்தை கையில் இருந்து எடுக்க மறுப்பதாகவும் மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர். பிரச்சாரத்திற்கு கார் கூட ஏற்பாடு செய்யாமல் நடந்தே செல்லலாம் என்று வெண்ணிமலை கூறியது குறித்து கட்சி மேலிடத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் தான் நெல்லை மாவட்ட மக்கள் நீதி மையம் பொறுப்பாளர்கள் செந்தில்குமார் மற்றும் கருணாகரன் ராஜா அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
இதேபோல் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மாவட்ட நிர்வாகிகளை கண்டுகொள்ளாத நிலையில் அவர்கள் வேறு கட்சியினருடன் தொடர்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் ஒருவரை கட்சியிலிருந்து கமல் நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த கமல் கடந்த 2 நாட்களாக எங்கிருக்கிறார் என்ற தகவல் கூட வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம் கமல் செல்லும் இடங்களில் எங்கும் கூட்டம் கூடுவது இல்லை மேலும் கமலின் பிரச்சாரத்திற்கு ஊடகங்களும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்குள்ளேயே கமல் முடங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.