வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? தொண்டர்களாவது தனது படத்தை பார்க்க வேண்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். 

கமல் மிகப்பெரிய தலைவர்தானே. ஏன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை? நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எவ்வளவு வாக்குகள் பெற்றது? தமிழகத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் நிலைமைதான் அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்களுக்கும் ஏற்படும்” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களை கண்டு மிரள்வது நியாயம் தான்.

 

அவரது மற்றொரு பதிவில், ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’என்று ஹேஷ்டேக்கைப் பதிவிட்டு, “நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்கு பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம். நாளை நமதே! நிச்சயம் நமதே!!”என அவர் தெரிவித்துள்ளார்.